முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் போரில் சிறைக்கைதிகளை ஈடுபடுத்தும் ரஷ்யா முடிவிற்கு எதிர்ப்பு

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2022      உலகம்
russia-2022-08-18

Source: provided

மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிராகப் போரிட சிறைக்கைதிகளை ஈடுபடுத்த ரஷ்யா முடிவு செய்து அதற்கான ஆள்சேர்ப்பு நடந்து வருவதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 6 மாதங்களைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைனும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் உதவியுடன் மிகப்பெரிய நாடான ரஷ்யாவை எதிர்த்து வருகிறது. 

இந்நிலையில், உக்ரைன் போரில் சிறைக் கைதிகளை ஈடுபடுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாகவும் இதற்காக ரஷ்யாவின் முக்கிய நகரங்களான மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரியாசான், ட்வெர், பிரையன்ஸ்க் ஆகிய பிராந்தியங்களில் ஆள்சேர்ப்பு நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மனித உரிமை ஆர்வலர்கள் இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டுள்ளதுடன் ரஷ்யாவின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்த போரில் ரஷியத் தரப்புக்கும் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறும் நிலையில், நிலைமையை சமாளிக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படலாம் ஊடகங்கள் கூறுகின்றன.  போரிட விரும்பும் சிறைக் கைதிகளை விடுவிப்பதுடன் அவர்களுக்கு மாத ஊதியம் 1,00,000 ரூபிள் (இந்திய மதிப்பில் ரூ. 1.32 லட்சம்), போனஸ் மற்றும் மரணம் ஏற்பட்டால் குடும்பத்தினருக்கு உதவித்தொகை ஆகியவை வழங்கப்படும் என உறுதியளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து