முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. குவாரியில் பாறைகள் சரிவு: சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2025      இந்தியா
UP 2025-11-16

Source: provided

உத்தரப் பிரதேசம் : உத்தரப்பிரதேசத்தில் கல் குவாரியின் இடிபாடுகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தொழிலாளி ஒருவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் கல் குவாரியில் பாறைகள் சரிந்ததில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கினர். நிகழ்விடத்தில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கல் குவாரியின் இடிபாடுகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை தொழிலாளி ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.

அதே நேரத்தில் பலர் சிக்கியிருப்பதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட அமைச்சரும் உள்ளூர் எம்எல்ஏவுமான சஞ்சீவ் குமார், சுமார் ஒரு டஜன் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு அடியில் இருக்கலாம் என்று கூறினார். சிக்கிக் கொண்டிருந்தவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை.

சுரங்க விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். வாரணாசி மண்டலத்தின் கூடுதல் காவல்துறை இயக்குநர் பியூஷ் மோர்தியா ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், இடிபாடுகளை அகற்றும் பணி நேற்று இரவு முதல் நடந்து வருகிறது.

ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது, மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. பலியானவர் பனாரி கிராமத்தைச் சேர்ந்த ராஜு சிங் (30) என போலீஸ் அடையாளம் கண்டுள்ளது. மலையிலிருந்து விழுந்த கற்கள் மிகப் பெரியவை என்றும், கவனமாக வேலை செய்ய வேண்டியிருப்பதால் மீட்புப் பணிகள் நேரம் எடுக்கும். முழு நிர்வாகமும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து