முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்லாமியர்கள் அவமதிப்பால் சல்மான் ருஷ்டியை குத்தினேன் கைதான குற்றவாளி விளக்கம்

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2022      உலகம்
salmon-rushty-2022-08-18

Source: provided

வாஷிங்டன்: எழுத்தாளர் சல்மான் ருஷ்டி இஸ்லாமியர்களை அவமதித்தார் என்பதற்காகவே கத்தியால் குத்தினேன் என கைதானவர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்தவர் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (75). பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த இவர், கடந்த 1988-ஆம் ஆண்டு ‘தி சட்டானிக் வெர்சஸ்’ என்ற ஆங்கில நாவலை எழுதி வெளியிட்டார். அந்த நாவல் இஸ்லாமிய மதத்தை அவமதித்துள்ளதாகக் கூறி, இந்தியா அந்தப் புத்தகத்துக்குத் தடை விதித்தது. இதையடுத்து, ருஷ்டிக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம், ஷட்டாக்குவா பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி மீது, இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாகத் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ருஷ்டிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் ஒரு கண்ணில் பார்வையிழக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் தொடர்பாக லெபனான் நாட்டை பூர்விகமாகக் கொண்ட அமெரிக்கர் ஹாதி மத்தர் (24) என்ற நபரை போலீஸார் கைது செய்தனர். கைதான மத்தர் அமெரிக்க நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ‘சல்மான் ருஷ்டி பிழைத்தது ஆச்சரியமாக இருக்கிறது. ’தி சட்டானிக் வெர்சஸ்’ நாவலின் சில பக்கங்களைப் படித்திருக்கிறேன். ஆனால், ஈரானின் 1989-ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சியாலோ ஈரான் அரசியல் தலைவரும் மதகுருவுமான அயதுல்லா கொமேனியின் ஃபத்வா ஆணையின் தூண்டுதலாலோ சல்மான் ருஷ்டியைக் கத்தியால் குத்தவில்லை. 

அயதுல்லா மீது நான் நல்ல மதிப்பை வைத்திருக்கிறேன். அவர் மிகச்சிறந்த மனிதர். அதற்கு மேல் எதுவும் கூற மாட்டேன். ஆனால், சல்மான் ருஷ்டி தன் எழுத்துகளால் இஸ்லாமியர்களை, அவர்களின் நம்பிக்கைகளைச் சிதைத்தவர். அவர் நல்ல மனிதராக இருக்க முடியாது. எனக்கு அவரை சுத்தமாகப் பிடிக்கவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 1989-ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டியைக் கொலை செய்ய உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு ஈரான் அரசியல் தலைவரும் மதகுருவுமான அயதுல்லா கொமேனி ஃபத்வா என்ற ஆணை பிறப்பித்தார். இதையடுத்து ருஷ்டி பிரிட்டன் காவல் துறையின் பாதுகாப்பில் பல ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து