முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

76-வது மாநில நீச்சல் போட்டி: முதல் நாளில் 4 புதிய சாதனை

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
swimming-2022-08-18

Source: provided

சென்னை: மாநில நீச்சல் போட்டியின் முதல் நாளில் 4 புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.  200 மீட்டர் பிரஸ்டிரோக் பிரிவில் தனுஷ் புதிய சாதனை நிகழ்த்தினார். தனுஷ் பந்தய தூரத்தை 2 நிமிடம் 21.60 வினாடியில் கடந்து தனது பழைய சாதனையை முறியடித்தார்.

சீனியர் நீச்சல் போட்டி...

தமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில் 76-வது மாநில சீனியர் நீச்சல் சாம்பியன் ஷிப் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 250 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியின் அடிப்படையில் செப்டம்பர் 6 முதல் 10-ந்தேதி வரை அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெறும் தேசிய சீனியர் நீச்சல் போட்டிக்கான தமிழக அணி தேர்வு செய்யப்படும்.

4 புதிய சாதனை... 

தொடக்க நாளில் 4 புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது. ஆண்களுக்கான 50 மீட்டர் பிரஸ்டிரோக் பிரிவில் தனுஷ் சுரேஷ் 29.23 வினாடியில் கடந்து புதிய சாதனை படைத்தார். 2011-ம் ஆண்டில் சர்வதேச வீரர் ஜே.அக்னீஸ்வர் 29.52 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. இதை தனுஷ் முறியடித்தார். இதே போல 200 மீட்டர் பிரஸ்டிரோக் பிரிவில் தனுஷ் புதிய சாதனை நிகழ்த்தினார். அவர் பந்தய தூரத்தை 2 நிமிடம் 21.60 வினாடியில் கடந்து தனது பழைய சாதனையை முறியடித்தார். இதற்கு முன்பு 2019-ல் அவர் 2 நிமிடம் 21.71 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.

பெனடிக்டன் ரோகித்... 

முதல் நாளில் தனுஷ் 2 புதிய போட்டி (மீட்) சாதனை புரிந்தார். இதே போல ஆண்களுக்கான 100 மீட்டர் பட்டர் பிளை நீச்சலில் டி.ஆதித்யா 56.93 வினாடியில் கடந்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டில் அரவிந்த் 57.00 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. மேலும் ஆண்களுக்கான 50 மீட்டர் பட்டர் பிளை பிரிவில் பெனடிக்டன் ரோகித் 25.47 வினாடியில் நீந்தி புதிய சாதனை புரிந்தார். இதற்கு முன்பு 2020-ல் வினாயக் 25.55 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.

பேக்ஸ்டிரோக் பிரிவு... 

400 மீட்டர் பிரீஸ்டைலில் சத்யசாய் கிருஷ்ணன், மான்யா முக்தா, 200 மீட்டர் தனி நபர் மெட்லி பிரிவில் பெனடிக்டன் ரோகித், சக்தி, 50 மீட்டர் பிரஸ்டிரேக் பெண்கள் பிரிவில் ஸ்ரீயா இஸ்வர், 200 மீட்டர் பேக்ஸ்டிரோக் பிரிவில் நிதிக், மதுமிதா ஆகியோர் முதல் இடத்தை பிடித்தனர். முதல் நாள் போட்டியில் புதிய சாதனை படைத்தவர்களை மாநில நீச்சல் சங்க செயலாளர் டி.சந்திர சேகரன், துணை தலைவர் முகுந்தன், பொருளாளர் முரளிதரன் ஆகியோர் பாராட்டினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து