முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 20 செப்டம்பர் 2022      விளையாட்டு
New-Zealand-team 2022--09-2

டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அடிலெய்டில்...

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. 

4 அணிகள்...

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக பிரதான சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன. 

கைல் ஜேமிசன்... 

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடம் மில்ன், ஃபின் ஆலன், பிரேஸ்வெல் போன்றோர் நியூசி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். காயம் காரணமாகப் பிரபல வீரர் கைல் ஜேமிசன் இந்த அணியில் இடம்பெறவில்லை. மார்டின் கப்தில், 7 டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடிய முதல் நியூசிலாந்து வீரர் என்கிற பெருமையை இந்தப் போட்டியில் பெறவுள்ளார். டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வான அணி, முத்தரப்பு டி20 போட்டியிலும் விளையாடவுள்ளது. 

நியூசிலாந்து அணி

கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்டின் கப்தில், ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கிளென் பிளிப்ஸ், மார்க் சேப்மன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிரெண்ட் போல்ட், டிம் செளதி, லாகி ஃபர்குசன், ஆலம் மில்ன். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து