முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசி கங்கை தீர்த்தத்துடன் ராமேசுவரம் கோவிலில் ஓ.பி.எஸ். சாமி தரிசனம்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      தமிழகம்
OPS 2022 09 22

Source: provided

ராமேசுவரம்: காசி கங்கை தீர்த்த்துடன் ராமேசுவரம் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் நேற்று சாமி தரிசனம் செய்தார்.

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு நேற்று ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். காசியில் உள்ள கங்கை தீர்த்தத்தை கொண்டு வந்து கங்கை தீர்த்தத்தால் சாமிக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜையிலும் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

அவருடன் அவரது தம்பி ராஜா 2-வது மகன் ஜெயப்பிரதீப் மற்றும் குடும்பத்தினர் வந்திருந்தனர். தொடர்ந்து அம்பாள் மகாலட்சுமி ஆஞ்சநேயர் உள்ளிட்ட சந்ததிகளுக்கும் சென்று ஓ.பன்னீர்செல்வம் தரிசனம் செய்தார். ஏற்கனவே கடந்த 18-ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் ராமேசுவரம் வந்து அக்னி தீர்த்த கடல் மற்றும் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தார். பின்னர், காசியில் சாமி தரிசனம் முடித்து அங்கிருந்து கங்கை தீர்த்தத்தை கொண்டு வந்து நேற்று மீண்டும் ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து