முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்., கட்சியின் புதிய தலைவர் காந்தி குடும்பத்தின் பினாமியாக இருப்பார் : பாரதிய ஜனதா கட்சி கடும் தாக்கு

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      இந்தியா
Cog 2022--09-23

Source: provided

புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் காந்தி குடும்பத்தின் பினாமி ஆக மட்டுமே இருப்பார் என்று பா.ஜ.க. கடுமையாக தாக்கியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசிதரூர், திக் விஜயசிங், அசோக் கெலாட் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ராஜஸ்தான் முதல்-மந்திரியாக உள்ள அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வானால், அம்மாநிலத்தின் அடுத்த முதல்-மந்திரி யார்? என்பதை காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மேகன் மற்றும் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பார்கள் என்ற செய்தி வெளியானது.

இந்த நிலையில், இது குறித்த கேள்விக்கு பதிலளித்த பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேஜாத் பூனவல்லா கூறுகையில்:- கட்சியின் முன்னாள் தலைவராக மாறிய பின், சோனியா காந்திக்கு என்ன தகுதி இருக்கும்? காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இது குறித்து முடிவு செய்ய வேண்டாமா? காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் காந்தி குடும்பத்தினரின் ரிமோட் கண்ட்ரோலில் இருப்பார்.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ஆக வருபவர், காந்தி குடும்பத்தின் "பினாமி"யாகவே இருப்பார். அடுத்த தலைவர் யாராக இருந்தாலும், ராகுல் காந்திக்கு கட்சியில் முக்கிய இடம் கிடைக்கும் என்று ப.சிதம்பரம் கூறி உள்ளார். ஆகவே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போல புதிய காங்கிரஸ் தலைவர் ரிமோட் மூலம் காந்தி குடும்பத்தால் கட்டுப்படுத்தப்படுவார்.

அதற்கு ப.சிதம்பரம் கூறிய இந்த அறிக்கை ஒரு சான்றாக இருக்கிறது.தற்போது நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் என்பது கண்துடைப்பே த விர வேறில்லை என்பதை இந்த அறிக்கைகள் தெளிவுபடுத்தியுள்ளன.

இவ்வாறு பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேஜாத் பூனவல்லா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து