முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு: கண்ணீர் விட்டு அழுத பெடரரும், நடாலும் - வாழ்த்து தெரிவித்து விராட் கோலி டுவிட்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      விளையாட்டு
Federer-Natal 2022--09-24

Source: provided

லண்டன் : பெடரரும், நடாலும் உணர்ச்சி ததும்ப கண்ணீர்விடும் புகைப்படமும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவர்களை வாழ்த்தும் விதமாக விராட் கோலி இட்ட டுவிட் இன்னும் அதிகமாக வைரலாகி வருகிறது.

ஓய்வு பெற்றார்...

41 வயதான டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் சர்வதேச டென்னிஸ் களத்திலிருந்து விடைபெற்றார். அண்மையில் அது குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருந்தார். பிரிட்டனில் நடைபெறும் லேவர் கோப்பை தொடர் தான் தனது கடைசி தொடர் என அவர் அறிவித்திருந்தார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துச் செய்திகளின் மூலம் பிரியாவிடை கொடுத்திருந்தனர்.

இரட்டையர் பிரிவு...

இந்நிலையில் நடால், ஆண்டி முர்ரே, ஜோகோவிச் மற்றும் ரோஜர் பெடரர் என மாடர்ன் டே டென்னிஸ் விளையாட்டின் மகத்தான நான்கு வீரர்களும் ஐரோப்பா அணிக்காக நடப்பு லேவர் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடுகின்றனர். இதில் நடால் மற்றும் பெடரர் இரட்டையர் பிரிவில் கலந்து விளையாடினர். இதுவே பெடரருக்கு கடைசி போட்டியாகும்.

வழியனுப்பும் நிகழ்ச்சி... 

நடாலுடன் இணைந்து விளையாடிய கடைசி ஆட்டத்தில் தோற்றவுடன் ஃபெடரரின் பிரிவு உபசார விழா டென்னிஸ் அரங்கில் நடைபெற்றது. பல உணர்ச்சிகரமான தருணங்களை அப்போது காண முடிந்தது. முதலில் ஃபெடரர் கண்ணீர் சிந்தினார். இதன்பிறகு அவர் அருகில் இருந்த நடாலும் சோகம் தாங்க முடியாமல் அழ ஆரம்பித்தார். இரு பிரபல வீரர்கள் அருகருகே அமர்ந்து அழுது கொண்டிருந்தது ரசிகர்களை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது. பிறகு ஜோகோவிச் உள்பட பல பிரபல வீரர்கள், ஃபெடரர் குடும்பத்தினர், நண்பர்கள் என உணர்ச்சிகரமான அத்தருணத்தில் பலரும் கண்ணீர் சிந்தினார்கள். ஃபெடரர் விலகும்போது என்னுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியும் விலகுவதாகவே உணர்கிறேன் எனப் பேட்டியளித்தார் நடால். 

உங்களுக்கு என் மரியாதை

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில், ”போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் இப்படி உணர்வுபூர்வமாக கண்ணீர் விடுவார்கள் என்று யாராவது நினைத்திருப்பார்களா? இதுதான் விளையாட்டின் அழகு. இதுவே எனக்கு பிடித்த அழகான ஸ்போர்ட்ஸ் படம். உங்களுடைய நண்பர் உங்களுக்காக அழும்போது கடவுள் கொடுத்த திறமையை ஏன் உங்களால் சிறப்பாக செய்ய முடிந்தது என்பதை உங்களால் அறிய முடியும். உங்கள் இருவருக்கும் என் மரியாதை... வேறு எதுவுமில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து