முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டி: அர்ஜூன் எரிகைசி-கார்ல்சென் இறுதிப்போட்டியில் மோதல்

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      விளையாட்டு
Arjun-Carlsen 2022--09-25

Source: provided

நியூயார்க் : ஜூலியஸ் பேர் ஜெனரேசன் கோப்பை ரேபிட் செஸ் போட்டி ஆன் லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி அரை இறுதியில் வியட்நாம் நாட்டை சேர்ந்த லயம் குவாங் லியை தோற்கடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு அரை இறுதியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சென் (நார்வே) ஜெர்மனியின் வின்சென்ட் நெய்மரை வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் இன்று கார்ல்சென்-அர்ஜூன் எரிகைசி மோதினர். இறுதி போட்டியின் தொடக்க சுற்றில் முதல் 2 ஆட்டங்களில் கார்ல்சென் வெற்றி பெற்றார்.

3-வது ஆட்டம் டிரா ஆனது. இதன் மூலம் கார்ல்சென் 2.5-0.5 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளார். இறுதி போட்டியை டை பிரேக்கருக்கு கொண்டு செல்ல இந்திய வீரர் அர்ஜூன் இறுதி போட்டியின் 2-வது சுற்றில் ( 4 ஆட்டம்) வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து