முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

59 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூமிக்கு அருகே வரும் வியாழன் : வானில் நிகழவிருக்கும் அரிய நிகழ்வு

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      உலகம்
Son 2022--09-25

Source: provided

நியூயார்க் : வானில் நிகழவிருக்கும் ஒரு அரிய நிகழ்வாக சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் வரும் திங்கள் கிழமை பூமிக்கு அருகே வருகிறது. 

நமது சூரியக்குடும்பத்தில் ஐந்தாவது கோளாக இருப்பது வியாழன் கோள் ஆகும். இது சூரியக் குடும்பத்திலேயே மிகப்பெரிய கோளாகும். இந்த வியாழன் கோளை 75-க்கும் மேற்பட்ட துணைக்கோள்கள் சுற்றிவருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த பிரம்மாண்ட கோள் இன்று பூமிக்கு அருகில் வரவிருக்கிறது என்று நாசா தெரிவித்துள்ளது. 

இன்று சூரியன் மேற்திசையில் மறையும் போது வியாழன் கோள் கீழ் திசையில் தெரிகிறது. இதற்கு முன்னதாக கடந்த 1963-ம் ஆண்டு இதுபோன்ற நிகழ்வு வானில் நிகழ்ந்திருக்கிறது. அப்போது வழக்கத்தை விட பெரிதாகவும், பிரகாசமாகவும் தெரியும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வியாழன் கோள் பொதுவாக பூமியில் இருந்து 96.5 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்.

ஆனால் இன்று இரண்டு கோள்களுக்கும் இடையேயான தொலைவு 36.5 கோடி கிலோமீட்டராக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது 59 ஆண்டுகள் கழித்து நடைபெறும் இந்த நிகழ்வை தொலைநோக்கி மூலம் காணலாம். அப்போது வியாழனை சுற்றிவரும் நான்கு துணைக்கோள்களையும் காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து