முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும் ரஷ்யாவிற்கு, அமெரிக்கா எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      உலகம்
America -2022-09--27

Source: provided

வாஷிங்டன்: உக்ரைனில் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், மேற்கத்திய நாடுகளால் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது என அந்நாட்டு அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசர் ஜேக் சல்லிவன், 

உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதலை நடத்துப் போவதாக தெரிவித்துள்ள ரஷியாவிற்கு அமெரிக்கா தீர்மானமாக பதிலளிக்கும் என்றார். ரஷ்யா இந்த எல்லையைத் தாண்டினால், பேரழிவு விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் உக்ரைனில் நடைபெறும் வாக்கெடுப்பு வலிமை அல்லது நம்பிக்கையின் அடையாளங்கள் அல்ல. இது ரஷ்ய ராணுவத்திற்கான திரும்ப அழைப்பு. ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து அவர்கள் ஓட முயற்சிக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.  உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவும், புடினும் எப்படி மோசமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறிகள் அவை என்றும் சல்லிவன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து