முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குமரி அனந்தனுக்கு வீடு ஒதுக்கீடு ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      தமிழகம்
CM-2- 2022-09-27

Source: provided

சென்னை: இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தனுக்கு  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில் வீடு வழங்கி, அதற்கான ஆணையினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். 

சென்னை தலைமைச் செயலகத்தில், இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தனுக்கு  தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய் குடியிருப்பில் வீடு வழங்கி, அதற்கான ஆணையினை வழங்கினார்.

இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருட்டிணன் - தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19-ம் நாளன்று பிறந்தவர். காமராசரின் சீடரான இவர், மக்கள் நலனுக்காக பதினேழு முறை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டதோடு, இலக்கியச் செல்வராகவும் திகழ்ந்தார். மேலும் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் அரும் பணியாற்றியவர்.

தமிழுக்கும், தமிழகத்திற்கும் தன் வாழ்நாளெல்லாம் பெருமை சேர்த்து வரும் அவர், தான் வாழ்வதற்கு வசதியாக, தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், அண்ணா நகர் கோட்டத்தில் அமைந்துள்ள, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில், வீடு வழங்கி, அதற்கான ஆணையினை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இலக்கியச் செல்வர் குமரி அனந்தனிடம்  வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து