முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்பு: ஜப்பான் பிரதமருடன் மோடி சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      உலகம்
Modi-japan-2022-09-27

ஷின்சோ அபே நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திரமோடி அங்கு ஜப்பான் பிரதமரை சந்தித்து பேசினார்.

ஜப்பானில் நீண்டகாலமாக பிரதமராக பதவி வகித்தவர் ஷின்சோ அபே (வயது63). கடந்த ஜூலை மாதம் இவர் தேர்தல் பிரசாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இதையொட்டி இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கபட்டது. அபேயுடன் பிரதமர் மோடி நட்புணர்வை பேணி வந்தார். பிரதமர் மோடி வெளியிட்டு இருந்த இரங்கல் செய்தியில் பாச மிகு நண்பர் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்தநிலையில் ஷின்சோ அபே நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு நேற்று ஜப்பான் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டு சென்றார். டோக்கியோ விமானநிலையத்தில் அவரை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷி வரவேற்றார். பின்னர் இருநாட்டு தலை வர்களும் பேசினார்கள்,

இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது., துயரம் நிறைந்த இந்த நேரத்தில் எங்களது இந்த சந்திப்பு நடந்தது. கடந்த முறை ஜப்பான் வந்த போது நீண்ட நேரம் அபேயுடன் உரையாடினேன். இந்தியா அவரை இழந்து தவிக்கிறது. அவர் இல்லாதததை இந்தியா உணர்கிறது. இவ்வாறு அவர் தெரி வித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து