முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசிகர்களின் இதயங்களை வென்ற சூர்யகுமார் யாதவ்

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      விளையாட்டு
Suryakumar 2022-09-27

Source: provided

திருவனந்தபுரம் சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் ரசிகர்கள் சிலர் சஞ்சு சாம்சனின் பெயரை முழங்கியபடி இருந்தனர். அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர். எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் அவர் இடம்பெறவில்லை. அதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ரசிகர்கள் இன்றைய போட்டியின்போது அவர் புகைப்படம் இடம்பெற்றுள்ள டி-ஷர்ட்டை அணிந்து போட்டியை பார்க்க வருவார்கள் என தெரிகிறது.

இந்த நிலையில், பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்த சூர்யகுமார் யாதவ், தனது போனில் சஞ்சு சாம்சனின் போட்டோவை ரசிகர்களை நோக்கி காட்டியுள்ளார். அதோடு ‘தம்ப்ஸ் அப்’பும் சொல்லியுள்ளார். அதை ரசிகர்கள் தங்கள் போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது சஞ்சு சாம்சன், நியூஸிலாந்து-ஏ அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியை வழி நடத்தி வருகிறார். அவர் தென்னாப்பிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

____________

டி20 கிரிக்கெட்டில் மோசமான

சாதனை படைத்தார் 'பும்ரா'

காயத்தால் ஆசிய கோப்பை தொடரில் விளையாடாமல் இருந்த பும்ரா டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் தற்போது நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாடினார். இந்த தொடரின் முதல் போட்டியில் ஓய்வில் இருந்த பும்ரா இரண்டாவது போட்டியின் போது அற்புதமாக பந்து வீசி இருந்தார். ஆனால் மூன்றாவது டி20 போட்டியில் அவர் நிறைய ரன்களை விட்டுக் கொடுத்தது அவருடைய பவுலிங் குறைபாட்டை வெளிக்காட்டியது. அதோடு டி20 கிரிக்கெட்டில் பும்ராவின் பலமே ரன்களை கொடுக்காமல் கட்டுக்கோப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான்.

ஆனால் இதற்கு மாறாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்றாவது டி20 போட்டியில் மோசமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் பந்து வீசிய அவர் விக்கெட்டை வீழ்த்தாமல் 50 ரன்களை வாரி வழங்கினார். இதுவே டி20 கிரிக்கெட்டில் பும்ராவின் மோசமான சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 2016-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக நான்கு ஓவர்களில் 47 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். அதன் பின்னர் தற்போது தான் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருக்கிறார். அதோடு டி20 கிரிக்கெட்டில் இதுவரை அவர் எந்த போட்டியிலும் நான்கு சிக்சர்களை விட்டுக் கொடுத்தது கிடையாது. ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த போட்டியில் அவர் நான்கு சிக்சர்களை விட்டுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

___________

கோவிலுக்கு பாரம்பரிய உடையுடன் 

வருகை தந்த தென் ஆப்பிரிக்க வீரர்..!

திருவனந்தபுரம் வந்தடைந்த தென்ஆப்பிரிக்க அணி வீரர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய தொடரை வென்ற கையோடு திருவனந்தபுரம் வருகை தந்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் நேற்று பயிற்சியை தொடங்கினர்.

இதற்கிடையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தென் ஆப்பிரிக்கா வீர்ர கேசவ் மகாராஜ் திருவனந்தபுரத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றான ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலுக்கு பாரம்பரிய உடையுடன் வருகை தந்தார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

___________

தென்னாப்பிரிக்காவுக்கு தொடர்: 

காயத்தால் தீபா ஹூடா விலகல் ?

27 வயதான தீபகே ஹூடா, இந்திய அணிக்காக 12 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான டி20 தொடரிலும் இடம் பெற்றிருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. 

இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக வரும் 28-ம் தேதி தொடங்கும் டி20 தொடரில் இவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல். ஆஸ்திரேலிய தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல். அதே போல் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் விளையாடவில்லை. அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் ரிப்போர்ட் செய்ய வேண்டி உள்ள காரணத்தால் இதில் பங்கேற்கவில்லை.

____________

டி 20 தரவரிசையில் இந்திய

அணி தொடர்ந்து ஆதிக்கம்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டி 20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என கைப்பற்றிய இந்திய அணி ஒரு புள்ளி கூடுதலாக பெற்று 268 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. 2-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி இந்தியாவைவிட 7 புள்ளிகள் பின்தங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. உலகக் கோப்பைக்கு முன்னதாக நடைபெறும் இந்தத் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் தரவரிசையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தலாம்.

______________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து