முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த ஆண்டில் தாஜ்மகாலை விட மாமல்லபுரத்துக்கு வருகை தந்த அதிக வெளிநாட்டினர் : மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் தகவல்

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2022      தமிழகம்
Mamallapuram 2022-09-30

Source: provided

சென்னை : 2021-ம் ஆண்டில் தாஜ்மகாலை விட மாமல்லபுரத்துக்கு அதிகம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்ததாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

2021-2022ம் ஆண்டின் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த நினைவுச் சின்னங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 1,44,984 பேர் மாமல்லபுரம் சிற்பங்களை காண வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தாஜ்மகாலுக்கு வெறும் 38,922 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமே சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்துக்கு வந்த பயணிகளை விட தாஜ்மகாலுக்கு சென்ற பயணிகள் எண்ணிக்கள் 33 சதவிதம் குறைவாக இருந்து உள்ளது. அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்த இடங்களின் பட்டியலில் 3-வது இடத்தில் சாளுவன்குப்பம், புலிக்குடைவரை, 5-வது இடத்தில் செஞ்சி கோட்டை உள்ளன.

உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்திலும், உத்தரபிரதேசம் 2-வது இடத்திலும் உள்ளன. தமிழ்நாட்டிற்கு 14 கோடி உள்நாட்டு பயணிகள் வருகை தந்துள்ளனர். இதேபோல, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்த மாநிலங்கள் பட்டியலிலும் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து