முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்தார் மல்லிகார்ஜூன கார்கே

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2022      அரசியல்
Mallikarjuna-Karke 2022-10-

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

அண்மையில் உதய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டத்தில் ஒரு நபருக்கு ஒரு பதவி என்ற கொள்கையைப் பின்பற்றுவது என்று முடிவு எட்டப்பட்டது. அதன்படி, தான் வகித்துவந்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கார்கே ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக கார்கே நேற்று முன்தினம் இரவே காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

இதனையடுத்து காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவரான சோனியா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சிப் பதவிக்கு வேறு ஒருவரை நியமனம் செய்துவிட்டு அதனை மாநிலங்களவைத் தலைவருக்கு தெரிவிப்பார்.

கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தலைவராக இருக்கும் சூழலில் கார்கேவை அடுத்த தலைவராக்க காந்தி குடும்பத்தில் முழு ஆதரவு கிடைத்துள்ளது. ஆதலால் மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகத் தேர்வாகும் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து