முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரம்மோற்சவ விழா 6-வது நாள்: திருப்பதியில் தங்க தேரோட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 2 அக்டோபர் 2022      ஆன்மிகம்
Tirupati 2022-10-02

Source: provided

திருப்பதி : பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளாக நேற்று காலை ஏழுமலையான் அனுமந்த வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார். மாலை 4 மணி முதல் 5 மணி வரை தங்க தேரோட்டம் நடந்தது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி 5-வதுநாள் இரவில் கருட சேவை நடந்தது. ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கருட சேவையை காண உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 3 லட்சம் பக்தர்கள் கருட சேவையை கண்டு களித்தனர்.

பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் இருந்து திருமலைக்கு 2,345 ட்ரிப் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் 1,01,880 பக்தர்கள் பயணம் செய்தனர். இதேபோல் திருமலையில் இருந்து திருப்பதிக்கு 2,386 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் 72,637 பக்தர்கள் பயணித்தனர். கருட சேவையை காண்பதற்காக பல மணி நேரமாக 4 மாட வீதிகளில் பக்தர்கள் காத்திருந்தனர். திருமலையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான நேற்று காலை ஏழுமலையான் அனுமந்த வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார். மாலை 4 மணி முதல் 5 மணி வரை தங்க தேரோட்டம் நடந்தது. தங்கதேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்தார். இரவு 8 மணி முதல் 9 மணி வரை கஜ வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து