முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிர்நீர் இயக்க திட்ட செயல்பாடுகளில் தமிழகத்திற்கு விருது: முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் கே.என். நேரு

வியாழக்கிழமை, 6 அக்டோபர் 2022      தமிழகம்
KN Nehru 2022-10-06

Source: provided

சென்னை: உயிர்நீர் இயக்க திட்ட செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழகத்திற்கு முதல் மாநிலத்திற்கான விருது மற்றும் தூய்மை இந்திய நகர்ப்புற இயக்கத்தின் கீழ் இராமேஸ்வரம் நகராட்சி மற்றும் போத்தனூர் பேரூராட்சிக்கு வழங்கப்பட்ட விருதுகள் ஆகியவற்றை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்து பெற்றார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலினை அமைச்சர் கே.என். நேரு சந்தித்து, உயிர்நீர் இயக்க திட்டத்தின் கீழ் 60 சதவிகித குடிநீர் குழாய்கள் இணைப்புகளைக் கொண்ட மாநிலங்களில் சிறந்த செயல்பாட்டிற்காக ஜனாதிபதியால் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட முதல் பரிசிற்கான விருது, தூய்மை இந்திய நகர்ப்புற இயக்கத்தின் கீழ் 50,000-க்கும் கீழ் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் தூய்மையான நகரமாக இராமேஸ்வரம் நகராட்சி தேர்வு செய்யப்பட்டு அதற்காக ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தால் வழங்கப்பட்ட விருது, தூய்மை இந்திய நகர்ப்புற இயக்கத்தின் 2.0 பதிப்பின் கீழ் 15,000 முதல் 25,000 மக்கள் தொகை கொண்ட நகரங்களில் தூய்மையான நகரமாக கோயம்புத்தூர் மாவட்டம், போத்தனூர் பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டு அதற்காக ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தால் வழங்கப்பட்ட விருது ஆகிய மூன்று விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றார். 

இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பேரூராட்சிகள் ஆணையர் டாக்டர் ஆர். செல்வராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் பா. பொன்னையா ஆகியோர் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து