Idhayam Matrimony

எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளுக்கு தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வி துறை உத்தரவு

வியாழக்கிழமை, 6 அக்டோபர் 2022      தமிழகம்
Educationa-department 20220-9-25

Source: provided

சென்னை: தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு ரூ.5000 தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை மூலம் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்பு நடத்தப்பட்டு வந்தது. இதன் நிர்வாகம் பள்ளிக் கல்வி துறையிடம் இருந்தாலும், பள்ளிகளின் வளாகங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில்தான் இந்த வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதன்படி தமிழகம் முழுவதும் 2,381 எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு முதல் எல்.கே.ஜி, யூ.கே.ஜி மூடப்படுவதாக கடந்த ஜூன் மாதம் தகவல் வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்த உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற்றது. மீண்டும் பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் செயல்படும் என்று அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகளில் கடந்த ஜூன் மாதம் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. 

இந்நிலையில் தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகளில் ரூ.5000 ஆயிரம் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களை பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக நியமனம் செய்ய ரூ.13.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து