முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் இந்தியக் குடும்பம் படுகொலை: உயர்மட்ட விசாரணைக்கு பஞ்சாப் முதல்வர் கோரிக்கை

வியாழக்கிழமை, 6 அக்டோபர் 2022      இந்தியா
Bagaavanth-Maan 2022-10-06

Source: provided

சண்டிகர்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இந்தியக் குடும்பம் ஒன்று படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடுமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் ஒன்று கலிஃபோர்னியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் அச்சமும் கவலையும் நிலவுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலிஃபோர்னியா மாகாணத்தில் 8 மாதக் குழந்தை அரூஹி தேரி, அவரது பெற்றோர் ஜஸ்லீன் கவ்வுர் (27) அவரது கணவர் ஜஸ்தீப் சிங் (36), இவர்களது உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் வடக்கு கரோலினாவின் மெர்சட் கவுன்டியில் இருந்து கடத்தப்பட்டனர். இதனையடுத்து மெர்சட் கவுன்டி ஷெரீஃப் வெர்ன் வார்ன்கே உத்தரவின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து காணாமல் போனவர்களைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், காணாமல் போன 4 பேரின் சடலமும் இண்டியானா சாலை மற்றும் ஹட்ச்ஹின்சன் சாலை ஒட்டிய ஒரு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், "கலிஃபோர்னியாவில் குழந்தை உள்பட 4 இந்தியர்கள் கொலை வேதனை அளிக்கிறது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார். 

இதற்கிடையே ஜஸ்தீப், அமன்தீப் சிங் குடும்பத்தினர் கடத்தப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அதில் ஜஸ்தீப், அமன்தீப் பின்னால் கைகள் கட்டப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் ஒரு ட்ரக்கில் ஏற்றப்படுகின்றனர். பின்னர் ஜஸ்லீன் மற்றும் அவரது 8 மாதக் குழந்தை அதே ட்ரக்கில் ஏற்றப்படுகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து