Idhayam Matrimony

சிரியாவில் வெடிகுண்டு விபத்து: ஈரான் ராணுவ அதிகாரி பலி

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      உலகம்
Syria 2022 11 23

சிரியாவில் வெடிகுண்டு விபத்தில் ஈரானை சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். 

சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2011-முதல் நடைபெற்று வரும் இந்த போரால் பெண்கள், குழந்தைகள் உள்பட அந்நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது. இதில் சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத்திற்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், சிரிய ராணுவத்திற்கு ஆதரவாக தனது படைகளையும் அனுப்பி வைத்துள்ளது. 

இந்த நிலையில், சிரியாவில் வெடிகுண்டு விபத்தில் ஈரான் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொல்லப்பட்ட ராணுவ அதிகாரி கர்னல் தாவூத் ஜாபரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இஸ்ரேல்தான் காரணம் என ஈரான் குற்றம் சுமத்தி உள்ளது. 

சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வாரம், ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து