Idhayam Matrimony

ஒட்டுமொத்த நாட்டையும் காங்கிரஸ் அழித்து விட்டது : பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      இந்தியா
modi-2022-09-01 (2)

Source: provided

மெஹ்சானா : காங்கிரஸ் கட்சி குஜராத் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் அழித்து விட்டதாக தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்த பிரதமர் மோடி, குஜராத் சந்தித்த பஞ்சம் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.

குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 1-ந்தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின்போது 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5-ந்தேதி 2-வது கட்ட தேர்தலின்போது 99 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

டிசம்பர் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். குஜராத்தில், 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. இந்த முறையும் வெற்றியை தக்க வைத்து கொள்ளும் பணிகளில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற போராடுகிறது. புதிதாக, கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.

தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் தீவிர பிரசார வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. இதன்படி, குஜராத்தின் மெஹ்சானா நகரில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் கூட்டத்தினரின் முன் பேசும்போது, மெஹ்சானாவில் மக்களின் அன்பு நிறைந்த வரவேற்பை பார்த்து செயலற்று போயுள்ளேன். குஜராத்தில் பா.ஜ.க. வெற்றி பெற தயாராகி வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் குஜராத் பெருமளவு மாறியுள்ளது. குஜராத் மாநிலம் சந்தித்த பஞ்சம் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது. அதனை அவர்கள் பார்த்தது இல்லை. அவர்களின் முந்தின தலைமுறை இன்று காணப்படும் குஜராத்திற்காக கடுமையாக உழைத்துள்ளனர் என்று பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சி குஜராத் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் அழித்து விட்டது. காங்கிரசானது, குடும்ப அரசியல், சாதிய அடிப்படையிலான, மதவெறி சார்ந்த மற்றும் ஓட்டு வங்கிக்கான அரசியல் நடத்தும் மாதிரியை கொண்டுள்ளது என்று பேசியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து