முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கால்பந்து போட்டியை பார்க்க இலவச டேட்டா என்பது போலி: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2022      தமிழகம்
Policd-2022 11 24

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க இலவச டேட்டா தருவதாக வலைதளங்களில் வரும் பதிவு மற்றும் போலியானது என சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்ற வரும் நிலையில் சமீப காலமாக உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை காண 50 ஜிபி டேட்டா இலவசம் என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது.  அதனைக் குறிப்பிட்ட நபர்களுக்கு ஷேர் செய்தால் உங்களுக்கு 50 ஜிபி டேட்டா இலவசம் என அதில் குறிப்பிடப்பட்டிருப்பதால் பலரும் இதனை நம்பி அந்தச் செய்தியை வெகுவாக பரப்பி வருகிறார்கள். 

இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை காண 50 ஜிபி டேட்டா இலவசம் என்று வரும் லிங்க்-கை ஓபன் செய்ய வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். 50 ஜிபி டேட்டா தருவதாக கூறும் ஆசைவார்த்தைகளை நம்பி, எந்த இணைப்பையும் கிளிக் செய்யாதீர்கள் என்றும் அவ்வாறு செய்தால் உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து