முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் கமல்ஹாசன் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் தனியார் மருத்துவமனை அறிக்கை

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2022      தமிழகம்
Kamal 2022-11-24

Source: provided

சென்னை: கமல்ஹாசன் உடல் நிலை சீராக உள்ளது , ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் தனியார் டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். இதுமட்டுமல்லாமல், கட்சி பணியிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார். கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தை சந்தித்தார். மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல்ஹாசன் உடல் நிலை சீராக உள்ளது , ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து