முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் தொல்லை புகார் எதிரொலி: பள்ளி தாளாளர் தற்கொலை முயற்சி

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2022      தமிழகம்
Sucide 2022-11-24

Source: provided

திருநின்றவூர்: பள்ளி தாளாளர் வினோத் கதறி அழுதபடி கொசு மருந்தை வாய்க்குள் அடித்து தற்கொலைக்கு முயன்ற வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

ஆவடியை அடுத்த திருநின்றவூர் இ.பி. காலனியில் தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். பள்ளியின் தாளாளராக வினோத் (வயது 34) உள்ளார். இவர் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவிகளுக்கு கவுன்சிலிங் மற்றும் சிறப்பு வகுப்பு தொடர்பாக பேசுவதாக அழைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பள்ளி தாளாளர் வினோத்தின் பாலியல் தொல்லை எல்லை மீறி சென்றதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் காலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி முன்பு மறியலிலும் ஈடுபட முயன்றனர். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் வினோத்தை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ராதாகிருஷ்ணன், தாசில்தார் வெங்கடேசன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மாலை 3 மணிக்கு பின்னர் மாணவிகளும், அவர்களது பெற்றோரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. வருகிற திங்கட்கிழமை முதல் பள்ளி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக பள்ளி தாளாளர் வினோத் மீது 4 பிரிவின் கீழ் திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். தற்போது வினோத் தலைமறைவாக உள்ளார். இதையடுத்து வினோத்தை கைது செய்ய பட்டாபிராம் உதவி கமிஷனர் சதாசிவம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. 

இதற்கிடையே தலைமறைவாக உள்ள பள்ளி தாளாளர் வினோத் கதறி அழுதபடி கொசு மருந்தை வாய்க்குள் அடித்து தற்கொலைக்கு முயன்ற வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் வினோத் மனமுடைந்து பேசுகிறார்.

மாணவ-மாணவிகள் நன்றாக வரவேண்டும் (பெயர்களை குறிப்பிட்டு பேசுகிறார்). மற்றவர்களின் பெயர்களை குறிப்பிடவில்லை என்று கவலைப்பட வேண்டாம். யாரையும் நான் தவறாக நினைத்ததில்லை. அனைவர் மீதும் அன்பு உண்டு. ஆனால் என் மீது இப்படி சொல்வீர்கள் என்று நினைக்கவில்லை. நான் அழ மாட்டேன் என்று நினைக்காதீர்கள். உடைந்து விட்டேன். நான் இன்னும் சாகவில்லை. (கதறி அழுகிறார்). அப்பா நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். நான் தவறு செய்யவில்லை.

ஆசிரியர்கள், கணித ஆசிரியர் (பெயர்கள் குறிப்பிட்டு) நீங்கள் கிடைத்தது வரம். எல்லோரும் முக்கிய மாணவர்கள். எதுவும் ஆகாது. எனது மாணவர்களை நான் நம்புகிறேன். அதற்கு பிறகு என்னேவோ...வேறு எதுவும் பேசுவதற்கு இல்லை. (அப்போது கொசு மருந்து ஸ்பிரேவை வாய்க்குள் அடிக்கிறார்) நான் போகிறேன். கண்டிப்பாக பிழைக்க மாட்டேன். அனுதாபம் எல்லாம் கிடையாது. 

இவ்வாறு அவர் பேசுகிறார்.

இந்த வீடியோ பதிவை வினோத் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இதனை வைத்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து