முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய டி-20 அணிக்கு நெக்ரா பயிற்சியாளராக கோரிக்கை

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2022      விளையாட்டு
24-RAm-58-1

Source: provided

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வியடைந்தது. இதையடுத்து புதிய தேர்வுக்குழுவை நியமிக்கவுள்ளது பிசிசிஐ. இந்நிலையில் இந்திய டி20 அணி பற்றி முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: டி20 கிரிக்கெட்டில் நெஹ்ரா போன்ற ஒருவர் பயிற்சியாளராக இருக்கவேண்டும். அவர் சமீபத்தில்தான் ஓய்வு பெற்றார். 

ராகுல் மீது எனக்கு மரியாதை உண்டு. டி20 கிரிக்கெட் பற்றி ராகுல் டிராவிடை விடவும் நெஹ்ராவுக்கு அதிகம் தெரியும். டி20 கிரிக்கெட்டில் சமீபத்தில் விளையாடிய ஒருவர் பயிற்சியாளர் பதவிக்குப் பொருத்தமாக இருப்பார். அதற்காக டிராவிடை நீக்க வேண்டும் என நான் கூறவில்லை. டிராவிடும் நெஹ்ராவும் இணைந்து 2024 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியை உருவாக்கலாம் என்றார்.

________________

ரசிகர் மொபைலை தட்டிவிட்ட 

ரொனால்டோவிற்கு அபராதம்

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ம் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், ரசிகரின் கையில் இருந்த மொபைல் போனை தட்டிவிட்டதற்காக ரொனால்டோவிற்கு ரூ50 லட்சம் அபராதமும் 2 கிளப் ஆட்டத்தில் விளையாடத்தடையும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் கடந்த ஏப்ரலில் நடைபெற்றது. தற்போது அவர் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேறிய நிலையில் அடுத்து அவர் இணையும் கிளப்பில் இந்த தடை தொடரும் என கூறப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பால் போட்டியில் பங்கேற்காத சூழல் ரொனால்டோவிற்கு ஏற்பட்டுள்ளது.

________________

ஒப்பந்தத்தில் இருந்து 

வெளியேறிய கப்தில்

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து அதிரடி வீரர் மார்டின் கப்தில் வெளியேறியுள்ளார். இது குறித்து கப்தில் கூறுகையில்., எனது நாட்டிற்காக விளையாடுவது ஒரு பெரிய கவுரவமாகும், மேலும் நியூசிலாந்து அணியில் உள்ள அனைவருக்கும் அவர்களின் ஆதரவிற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என கூறியுள்ளார் .

நியூசிலாந்து அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ள கப்தில் அந்த அணியின் முக்கிய வீரராக திகழ்ந்துள்ளார்.ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த 3-வது நியூசிலாந்து வீரர், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் போன்ற பெருமைகளை மார்டின் கப்தில் கொண்டுள்ளார்.

________________

நம்பர் ஒன் இடம் பிடித்த 

டென்னிஸ் வீராங்கனை

டென்னிஸ் வீராங்கனை ரேச்சல் ஸ்டல்மேன். ரோஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ் மற்றும் எம்மா ராடுகானு போன்றவர்கள் டென்னிஸ் விளையாட்டில் முன்னணியில் இருப்பதுடன் சமூக ஊடக தளங்களிலும் அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள், பின்தொடர்பவர்களை கொண்டுள்ளனர். ஆனால், விளையாட்டில் முன்னணி பெற போராடும் சூழலில் இருந்து விலகி, சமூக ஊடகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் முயற்சியில் ரேச்சல் இறங்கினார்.

அது அவருக்கு பலனளித்து உள்ளது. அமெரிக்காவின் மிசோரி பகுதியில் செயின்ட் லூயிஸ் நகரை சேர்ந்தவரான ரேச்சல், டிக்டாக்கில் பிரபல நபரானார். அவரது தந்திரம் நிறைந்த ஷாட்டுகளை பார்ப்பதற்காகவே, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரை டிக்டாக்கில் பின்தொடருகின்றனர். இன்ஸ்டாகிராமிலும் பிரபலமடைந்துள்ள ரேச்சல் 2.32 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். இதனால், டென்னிசில் சமூக ஊடகம் வழியே அதிக தாக்கம் ஏற்படுத்தியவர்களின் வரிசையில் ரேச்சல் நம்பர் ஒன் இடம் பிடித்து உள்ளார்.

________________

மைதானத்தை சுத்தம் 

செய்த ஜப்பான் ரசிகர்கள்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதே போல 4 முறை உலக கோப்பையை வென்ற ஜெர்மனி 1-2 என்ற கோல் கணக்கில் மற்றொரு ஆசிய அணியான ஜப்பானிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது.

ஜப்பானின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை கலீபா சர்வதேச மைதானத்தில் இருந்த அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடினார்கள். கோல் அடித்த போது மைதானத்தில் ஏராளமான பாட்டில்கள் வீசப்பட்டது. போட்டி முடிந்து வெளியே செல்லும் முன்பு ஜப்பான் ரசிகர்கள் ஸ்டேடியத்தில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்தனர். ஜப்பான் ரசிகர் ஒருவர் குப்பைகளை எடுத்து நீலநிற கழிவு பைகளில் போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. இதையொட்டி ஜப்பான் ரசிகர்களை சர்வதேச கால்பந்து சம்மேளனம் பாராட்டி உள்ளது. 

________________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து