முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலத்தில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      தமிழகம்
Kuthalam 2022-11-27

Source: provided

தென்காசி : குற்றாலம் அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து வருவதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் உற்சாகமாக குளித்து விட்டு செல்கின்றனர். இதனால் குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையினால் அங்குள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. தற்போது மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது. இந்த நிலைலயில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு வந்து செல்கிறார்கள்.

தண்ணீர் நன்றாக விழுவதால் அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து செல்கிறார்கள். கடந்த ஒரு வாரமாக மழை பெய்யவில்லை. வெயில் அடித்து வருகிறது. தொடர்ந்து வெயில் அடித்தால் அருவிகளில் தண்ணீர் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து