முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் முர்ரே காலமானார்

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      விளையாட்டு
David-Murray 2022-11-27

Source: provided

பிரிட்ஜ்டவுன் : வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் முர்ரே தனது 72 வயதில் காலமானார். இவரது மறைவு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

1973 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய டேவிட் முர்ரே, விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். 

அந்த சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி கண்ட சிறந்த விக்கெட் கீப்பராக டேவிட் முர்ரே திகழ்ந்தார். அவர் 19 டெஸ்ட் போட்டிகளிலும் (601 ரன்கள்), 10 ஒருநாள் (45 ரன்கள்) போட்டிகளிலும் விளையாடி உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பராக விளையாடி 73 கேட்ச்களை பிடித்துள்ளார். டேவிட் முர்ரே பிரிட்ஜ்டவுனில் உள்ள அவரது வீட்டின் முன்பு மயங்கி விழுந்து உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியமும் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உலக அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் டேவிட் முர்ரேவின் மறைவுக்கு இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து