முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷென்ஷோ-15 ராக்கெட் மூலம் இன்று டியாங்காங் ஆய்வு நிலையத்திற்கு 3 வீரர்களை அனுப்புகிறது சீனா

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      உலகம்
China 2022-11-28

விண்வெளியில் சீனா அமைத்து வரும் ஆய்வு நிலையத்திற்கு இன்று மேலும் மூன்று வீரர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். 

டியாங்காங் என்று பெயரிடப்பட்டுள்ள விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைத்து வரும் சீனா அதன் கட்டுமான பணிகளுக்காக பல்வேறு நிபுணர்களை விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. இதற்காகவே ஷென்ஷோ என்ற கனரக விண்கலத்தினை சீனா தயாரித்துள்ளது.

இந்நிலையில் இன்று மூன்று விண்வெளி வீரர்களுடன் ஷென்ஷோ-15 விண்கலம் ஏவப்படுகிறது. ஜியோங்வான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படும் ராக்கெட்டில் மூன்று வீரர்கள் பயணிக்க இருக்கின்றனர். இவர்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு டியாங்காங் விண்வெளி நிலையத்தில் கட்டுமான மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுவார்கள் என்று சீனா விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து