முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேட்டோ அமைப்பின் உறுப்பினராக உக்ரைன்: பொதுச்செயலாளர் உறுதி

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      உலகம்
Anthony 2022-11-30

Source: provided

புக்கரெஸ்ட் : உக்ரைன், நேட்டோ அமைப்பின் உறுப்பினராவது உறுதி என்று நேட்டோ பொதுச்செயலாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா, கனடா மற்றும் 28 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டாவில் இணைவதற்கு உக்ரைன் தயாராகி வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா போரை தொடங்கியது. 10 மாதங்களை கடந்தும் போர் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. 

இந்த நிலையில் போரில் ரஷ்யாவை தோற்கடிக்க உக்ரைனுக்கு கூடுதல் உதவிகளை வழங்குவது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டில் நேட்டோ உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கலந்து கொண்டார். 

கூட்டத்துக்கு பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,  நேட்டோவின் கதவு திறந்தே இருக்கிறது. இந்த அமைப்பில் சேர விரும்பும் நாடுகளை தடுக்கும் அதிகாரம் ரஷ்யாவுக்கு இல்லை. உக்ரைனை உறுப்பினராக சேர்ப்பதில் நாங்கள் இப்போதும் உறுதியாக இருக்கிறோம். 

ஒரு நாள், உக்ரைன் நேட்டோ அமைப்பில் உறுப்பினராகி விடும். ஆனால் தற்போது போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனை ஆதரிப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. போரில் உக்ரைன் வெற்றி பெற வேண்டும் என கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து