முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக புதிய இணையதளம்: மத்திய அரசு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 8 ஜூலை 2025      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு  அறிவித்துள்ளது. 

2027-ம் ஆண்​டில் இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்​கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு கடந்த மாதம் 16-ம் தேதி வெளியிட்டது. அந்த அறிவிப்பில், லடாக் போன்ற பனிப்பொழிவு நிறைந்த பகுதிகளில் அக். 1, 2026 என்ற தேதியை அடிப்படையாகக் கொண்டும், நாட்டின் பிற பகுதிகளில் மார்ச் 1, 2027 என்ற தேதியை அடிப்படையாகக் கொண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள்​தொகை கணக்கெடுப்பில், பொதுமக்கள் சுயமாக பங்கேற்கலாம் என்றும் அதற்காக விரைவில் இணையதளம் தொடங்கப்படும் என்றும் மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது: முதலாவது டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பாகும் இது. இதில் பங்கேற்கவுள்ள கணக்கெடுப்பாளர்கள் ஆன்டிராய்ட், ஆப்பிள் போன்கள் வழியாக தகவலைத் திரட்டுவர். மேலும், இதில் சுயமாக மக்கள் பங்கேற்று தங்களது விவரங்களை தெரிவிக்க இந்த புதிய இணையதளம் உதவும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பை நவீனப்படுத்துவதற்காகவே டிஜிட்டல் கணக்கெடுப்பு திட்டத்தைத் தொடங்கவுள்ளோம். முதல்முறையாக டிஜிட்டல் முறையில் தகவல்களைத் திரட்டி, அதை மத்திய சர்வருக்கு எடுத்துச் செல்லவுள்​ளோம். மக்கள் சுயமாக கணக்கெடுப்பில் பங்கேற்பதற்காக விரைவில் தனி இணையதளத்தை மத்திய அரசு தொடங்கவுள்ளது. இவ்வாறு அவர்கள்​ தெரிவித்தனர்​.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து