எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பாட்னா : பீகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பல திட்டங்களை அறிவித்துள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நேற்று காலை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் 43 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் சித்தார்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் நலதிட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் என 43 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, பீகார் மாநில இளைஞர் ஆணையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் படிக்கும் மாணவர்கள், பணிபுரியும் இளைஞர்கள், உயர்கல்வி உதவி தேவைப்படும் இளைஞர்கள், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் வகையில் இந்த ஆணையம் செயல்படவுள்ளது.
பீகார் மாநில அரசுப் பணிகளில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண்களுக்கு 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நேரடி நியமனத்தில் உள்ள அனைத்துப் பதவிகளுக்கும் இந்த இடஒதுக்கீடு பொருந்தும். யு.பி.எஸ்.சி. மற்றும் பி.பி.எஸ்.சி. தேர்வுகளின் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ. 50,000 மற்றும் ரூ. 1 லட்சம் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


