முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் ஹசாரே அரையிறுதி: ருதுராஜ் கெயிக்வாட் சதம்

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      விளையாட்டு
Rudraaj 2022-11-28

Source: provided

மும்பை : விஜய் ஹசாரே போட்டியின் அரையிறுதியில் அஸ்ஸாம் அணிக்கு எதிராகச் சதமடித்து அசத்தியுள்ளார் மஹாராஷ்டிர அணியின் கேப்ட்ன் ருதுராஜ் கெயிக்வாட்.

7 சிக்ஸர்கள்...

ஆமதாபாத்தில் நடைபெற்று வரும் அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற அஸ்ஸாம் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. காலிறுதியில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களுடன் இரட்டைச் சதமடித்து சாதனை படைத்த ருதுராஜ் கெயிக்வாட் இன்றும் அபாரமாக விளையாடினார். 126 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகளுடன் 168 ரன்கள் எடுத்து 45-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அன்கித் பாவ்னே, 89 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 110 ரன்கள் எடுத்தார். இதனால் மஹாராஷ்டிர அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 350 ரன்கள் குவித்தது. முக்தா உசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

6 சதங்கள்...

விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் கடைசியாக விளையாடிய கடைசி 9 ஆட்டங்களில் ஒரு இரட்டைச் சதம், 6 சதங்கள் அடித்துள்ளார் ருதுராஜ். அதன் விவரங்கள்: 136 vs மத்தியப் பிரதேசம், 154* vs சத்தீஸ்கர், 124 vs கேரளம், 21 vs உத்தரகண்ட், 168 vs சண்டிகர், 124* vs ரெயில்வே, 40 vs பெங்கால், 220* vs உத்தரப் பிரதேசம், 168 vs அஸ்ஸாம் (நேற்று).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து