முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

90-வது பிறந்த நாள்: கி. வீரமணியின் இல்லத்திற்கு சென்று முதல்வர் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2022      தமிழகம்
CM-1 2022-12-02

 திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 90-வது பிறந்தநாளையொட்டி அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு மற்றும் பொன்முடி ஆகியோர் பங்கேற்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

முன்னதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது, 

திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தர் என்ற பேரறிஞர் அண்ணாவின் புகழுரைக்கேற்ப, 10 வயது முதல் தந்தை பெரியாரின் இலட்சியத்தை முழங்க தொடங்கி, இளையோருக்கு நிகராக சமூக நீதி போர்க்களத்தில் சளைக்காமல் போராடி, பகுத்தறிவு இனமான  உணர்வினை ஊட்டிவரும் திராவிடர் கழக தலைவருக்கு அகவை 90 என்பதில் அகம் மகிழ்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து