முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

140 அடியை தாண்டியது முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் கேரளாவுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2022      தமிழகம்
Mullaperiyar-dam 2022 12 04

Source: provided

கூடலூர் ; முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. பேபி அணையை பலப்படுத்தி முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்க அறிவுறுத்தியுள்ளது. 

ரூல் கர்வ் முறைப்படி மே மாதம் 31-ம்தேதி வரை 142 அடி தண்ணீர் தேக்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 140.10 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் 142 அடியை எட்ட வாய்ப்பு உள்ளது. நேற்று முன்தினம் மாலை 140 அடியை எட்டியதும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டி பெரியாறு, வல்லக்கடவு, உப்புத்துறை, சப்பாத்து உள்ளிட்ட பெரியாற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை தமிழக நீர் வளத்துறை அதிகாரிகள் இடுக்கி மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பினர். 

141 அடியை எட்டியதும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 142 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படும். அதன் பின்னர் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து