முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி 90 சதவீதத்தை எட்டியுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      தமிழகம்
Ma-Suphramanian 2021 12-06

கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தி உள்ளோம் என்றும், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி 90 சதவீதத்தை எட்டியுள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு நிறைவு மாநாடு நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, மாநாட்டின் சிறப்பு இசை பாடல், நூற்றாண்டு நினைவு சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 

தொடக்கத்தில் கொரோனா தொற்று மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தினாலும், முதல்வர் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு மிகவும் திறமையாக கொரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியை பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி 96 சதவீதம் பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 92 சதவீத பேருக்கும் போடப்பட்டுள்ளது. 

மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி 90 சதவீதத்தை எட்டியுள்ளது. யானைக்கால் நோயால் இதுவரை 8,023 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பொது மக்கள் நலனுக்காக முதல்வர் சமீபத்தில் 389 நடமாடும் மருத்துவ வாகனத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த துறை இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து