எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரதமரின் பரிசு பொருள்களை ஏலத்தில் எடுத்த சேலத்துக்காரர், பிரதமரின் பரிசு பொருள் தங்களுடைய வீட்டில் இருப்பது குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனக்கு கிடைக்கும் பரிசுப் பொருள்களை ஆண்டுக்கு ஒரு முறை ஏல விற்பனை செய்து, அதன் வாயிலாக கிடைக்கும் தொகையினை பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்து வருகிறார். பிரதமர் கலந்து கொள்ளும் பல்வேறு விழாக்களில் கிடைக்கும் பரிசு பொருள்கள் மின்னணு முறையில் ஏலம் விடப்படுகிறது. இதை நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.
இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த பழைய இரும்புக் கடை வியாபாரி கார்த்திகேயன், பிரதமருக்கு பரிசாக கிடைத்த திருவள்ளுவர் சிலையையும் பட்டு வேஷ்டிகளையும் 32 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார். ஏலத்தில் எடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் கார்த்திகேயன் வீட்டுக்கே கொண்டு வந்து வழங்கப்பட்டது. திருவள்ளுவர் சிலை மற்றும் பட்டு வேஷ்டிகளை பெற்றுக் கொண்ட அவர் பிரதமர் பயன்படுத்திய பொருள்கள் தமிழகத்தில் குறிப்பாக தனது வீட்டில் இருப்பது பெருமைக்குரியதாக கருதுவதாக தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


