முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலங்கு வதை அனைத்தையும் தடுக்க முடியாது: தமிழக கலாச்சாரத்தை பாதுகாக்கவே 'ஜல்லிக்கட்டு' அனுமதி சட்டம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      இந்தியா
Tamil-Nadu-Assembly-2022-01-22

சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் விலங்கு வதை அனைத்தையும் தடுக்க முடியாது என்று தெரிவித்த தமிழக அரசு, தமிழக கலாச்சாரத்தை பாதுகாக்கவே 'ஜல்லிக்கட்டு' அனுமதி சட்டம் தமிழகத்தில் இயற்றப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசின் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடைகோரி, பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி வாதிட்டார். விலங்குகளுக்கு தேவையற்ற வதை, வலியை தடுக்கும் அதே விலங்கு வதை தடுப்புச் சட்டத்தில், அவசியமான வலியும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொதி சுமக்கும் விலங்குகளை சுட்டிக் காட்டி வாதங்களை அவர் முன் வைத்தார். 

மேலும் அவர் கூறியுள்ளதாவது., விலங்குகளுக்கான வதை என்ன என்பதை முடிவு செய்ய சட்டப்பேரவை, பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு, விலங்கு வதை தடுப்புச் சட்டத்தை இயற்றுவதற்கு சட்டப்பேரவைக்கு அதிகாரமுண்டு. விலங்குகளுக்கான வதை அனைத்தையும் முற்றிலும் தடுக்க முடியாது. தமிழக கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி கலாச்சாரம் உள்ளது. பிரியாணிக்காக விலங்குகளை பலியிடுவது கலாச்சாரமாகும். அசைவ பிரியர்களை கறி சாப்பிட கூடாது என விலங்குவதை தடுப்புச் சட்டத்தின் மூலம் தடுக்க முடியுமா? தமிழக கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 

சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது ஜல்லிக்கட்டு. ஒரு கலாச்சாரத்தை காப்பது அந்த அரசுகளின் கடமை. கலாச்சாரத்தை காப்பது தமிழக அரசின் கடமை மட்டுமல்ல பொறுப்பும் கூட. கலாச்சார அடையாளம் என்பதால் பல வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஜல்லிக்கட்டை காண வருகின்றனர். இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து