முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருக்கலைப்பு குறித்து தாயின் முடிவே இறுதியானது: டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      இந்தியா
Delhi-High-Court 2022 12-06

கருக்கலைப்பு பற்றி தாய் எடுக்கும் முடிவே இறுதியானது என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 

டெல்லியைச் சேர்ந்த 26 வயது பெண் தனது 33 வார கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கருவில் உள்ள குழந்தைக்கு பெருமூளையில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் குழந்தையின் நலன் கருதி கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். 

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா சிங் அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தெரிவிக்கையில்., மருத்துவர்கள் மறுத்த போதிலும் பெண்ணின் 33 வார கருவைக் கலைக்க அனுமதி வழங்கி இந்தியாவில் கருக்கலைப்பு குறித்து பெண் முடிவு செய்ய சட்டத்தில் அதிகாரம் உண்டு என்று தெரிவித்தார்.

'கருவை கலைப்பது குறித்த கர்ப்பிணி  பெண்ணின் உரிமை உலகம் முழுவதும் விவாதப் பொருளாக உள்ளது. கருக்கலைப்பு விவகாரத்தில் தாய் எடுக்கும் முடிவே இறுதியானது. ஒரு பெண்ணின் பிரசவ விருப்பத்தையும், பிறக்காத குழந்தையின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வாய்ப்பையும் அங்கீகரிக்க வேண்டும்.

ஒரு பெண், குழந்தையைப் பெற்றெடுக்க விரும்புகிறாளா என்ற இறுதித் தேர்வு அந்தப் பெண்ணிடமே உள்ளது. இதனை சட்டத்தின் மூலமாக அங்கீகரிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதுபோல கருக்கலைப்புக்கு மருத்துவக்குழுவின் கருத்தும் முக்கியமானதுதான். குழந்தையின் நலன் கருதி இந்த கருத்துகள் விரிவானதாக இருக்க வேண்டும். இதுபோன்ற விஷயத்தில் தரமான அறிக்கைகளுடன் வேகமும் முக்கியம்' என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து