முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2024 இறுதிக்குள் அமெரிக்க தரத்துடன் இந்திய சாலைகள்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

சனிக்கிழமை, 17 டிசம்பர் 2022      இந்தியா
Nitin-Gadkari-2022 12 17

2024-ம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க தரத்துடன் இந்திய சாலைகள் அமைக்கப்படும் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் (பிக்கி) ஆண்டு மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

நாட்டில் உலகத் தரத்திலான சாலை உள்கட்டமைப்புகளை மேற்கொண்டு வருகிறோம். வரும் 2024ம் ஆண்டு இறுதிக்குள் நமது சாலை உள்கட்டமைப்பானது அமெரிக்க சாலைகளின் தரத்திற்கு இணையாக இருக்கும். நமது தளவாட செலவு ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. தற்போது, இது 16 சதவீதமாக உள்ளது, ஆனால் 2024 இறுதி வரை, ஒற்றை இலக்கமாக, 9 சதவீதம் வரை கொண்டு செல்வோம் என உறுதி அளிக்கிறேன்.

தூய எரிசக்தியான பசுமை ஹைட்ரஜன் எதிர்காலத்திற்கான எரிபொருள். இந்தியா தன்னை ஒரு ஆற்றல் ஏற்றுமதியாளராக வடிவமைத்துக்கொள்ளும் வகையில் சிறந்த நிலையில் உள்ளது. இது இந்தியாவில் பசுமை ஹைட்ரஜனால் மட்டுமே சாத்தியமாகும். எதிர்காலத்தில், விமானம், ரெயில்வே, சாலை போக்குவரத்து, ரசாயனம் மற்றும் உரத் தொழில்களில் பசுமை ஹைட்ரஜன் ஆற்றல் ஆதாரமாக இருக்கும். எதிர்காலத்தில் பசுமை ஹைட்ரஜனின் உலகளாவிய உற்பத்தி மையமாகவும் ஏற்றுமதியாளராகவும் இந்தியா மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து