முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளர்ச்சிப் பாதையில் வடகிழக்கு மாநிலங்கள் : மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 18 டிசம்பர் 2022      இந்தியா
amit-shah 2022-12-01

Source: provided

ஷில்லாங் : மோடி முதல்முறையாக பிரதமரான பிறகு, வடகிழக்கு மாநிலங்கள் அமைதி மற்றும் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சிலின் பொன்விழா கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியவதாவது: 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வடகிழக்கு மாநிலங்களையும், இன்று இருக்கும் வடகிழக்கு மாநிலங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், மோடி முதல்முறையாக பிரதமரான பிறகு, வடகிழக்கு மாநிலங்கள் அமைதி மற்றும் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.

பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் 60 சதவீதம் குறைந்துள்ளன. இது பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய சாதனை. முன்னதாக, ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இப்போது, யாரும் கோரிக்கை வைக்கத் தேவையில்லை, இரண்டு படிகள் முன்னால் நின்று, ரத்து செய்வதற்கான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.

அருணாச்சலப் பிரதேசத்தில், ஒரே ஒரு மாவட்டம் மட்டுமே ஆயுதப்படை சிறப்புச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. நாகாலாந்தில், 7 மாவட்டங்களில் இருந்தும், திரிபுரா மற்றும் மேகாலயாவில் ஆயுதப்படை சிறப்புச்சட்டம் முழுமையாக நீக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து