முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி திரெளபதி முர்முவுடன் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை சந்திப்பு

திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2022      இந்தியா
Murmu 2022 12 19

ஜனாதிபதி திரெளபதி முர்முவை கூகுள் மற்றும் அல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை நேற்று நேரில் சந்தித்தார்.

மதுரையில் பிறந்த இந்திய - அமெரிக்கரான சுந்தர் பிச்சை, வணிகம் மற்றும் தொழில்துறை பிரிவின் கீழ் 2022ஆம் ஆண்டுக்கான பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.   இதையடுத்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதர அதிகாரி தரன்ஜித் சிங் சந்து, சுந்தர் பிச்சைக்கு, பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவித்தார்.

இந்நிலையில், டெல்லிக்கு வருகை தந்துள்ள சுந்தர் பிச்சை, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது, உலகளாவிய எண்ம(டிஜிட்டல்) கல்விக்கான பணியை மேற்கொள்ள சுந்தர் பிச்சையிடம் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து