முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு: விஜய்யின் வாரிசு திரைப்பட டிரைலர் இன்று வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 3 ஜனவரி 2023      சினிமா
Vijay 20221 01 03

Source: provided

சென்னை : வாரிசு திரைப்படத்தின் டிரைலர் இன்று (ஜன.4) மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ், சரத் குமார் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.   பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, ஷாம் என பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில், அனிருத் பாடிய பாடல் உள்பட படத்தின் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டது. இதில், நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பேசிய விடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது.

வாரிசு திரைப்படத்தின் டிரைலர் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் பணிகள் முடிவடையாததால் தள்ளிப் போனதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு சன் டிவியின் யூடியூப் சேனலில் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து