எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை 3 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு இன்று ஒத்திவைத்துள்ளது. மேலும் இந்த வழக்கை இந்த வாரத்தில் முடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூன் 23-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் பொதுக்குழு நிறைவடைந்தது. பின்னர், ஜூலை 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டது. இதையடுத்து, அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது எனவும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த சென்னை ஐகோர்ட் 2 நீதிபதிகள் அமர்வு பொதுக்குழு செல்லும் என்றும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் உத்தரவிட்டது.
பொதுக்குழு செல்லும் என்று ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில்., கட்சிக்கு இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டுவிட்டாரா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார் என்று இ.பி.எஸ். தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. மேலும் ஜூலை 11 அன்று பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து இதுவரை பன்னீர்செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றும் இ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் செல்லாது என்றால் அனைத்து பதவிகளும் செல்லாது என்று ஓ.பி.எஸ். தரப்பில் வாதம் செய்யப்பட்டது. கழகம் என்றால் என்ன என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகளுக்கு, கழகம் என்றால் கட்சி என்று பொருள் என்று மூத்த வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் விளக்கம் அளித்தார். பின்னர் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கின் விசாரணையை இந்த வாரமே முடிக்க விரும்புகிறோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து, அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு அடுத்த விசாரணையை இன்று மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தது நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


