முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2023      வர்த்தகம்
Gold 2022-12-31

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 280 உயர்ந்துள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம் முதல் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. டிசம்பர் 2 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ. 5,000 -யைத் தாண்டிய நிலையில் டிச. 14ல் ரூ. 5,100-யைத் தாண்டியது.  கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. 

நேற்று (வெள்ளிக்கிழமை) 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ. 42,600-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ. 35 உயர்ந்து ரூ. 5,325-க்கு விற்பனை  செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ஒரு ரூபாய் அதிகரித்து ரூ. 74.50-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 74,500-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து