முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் வாபஸ்

சனிக்கிழமை, 21 ஜனவரி 2023      விளையாட்டு
Bajrang-Punia 2023 01 21

Source: provided

புதுடெல்லி : இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி விலக கோரி மீது மல்யுத்த வீராங்கனைகள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு...

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி அவர், பதவி விலகக்கோரி முன்னணி வீராங்கனைகளான வினேஷ் போகத், சரிதா, சாக் ஷி மாலிக், சங்கீதா போகத் உள்ளிட்ட பலர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த இருதினங்களுக்கு முன்னர் போராட்டத்தை தொடங்கினர். இவர்களுடன் முன்னணி வீரரான பஜ்ரங் புனியாவும் போராடி வந்தார்.

3-வது நாளாக....

இந்த போராட்டம் 3-வதுநாளாக தொடர்ந்தது. இதற்கிடையே போராட்டம் நடத்தியவர்களில் இருந்து பஜ்ரங் புனியா, ரவி தஹியா, சாக் ஷி மாலிக், வினேஷ்போகத் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குரை நேரில் சந்தித்து பேசினர். சுமார் ஏழு மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை உடனடியாக கலைக்கவேண்டும் என வீராங்கனைகள் கோரிக்கை வைத்தனர்.

போராட்டம் வாபஸ்...

நள்ளிரவும் கூட்டம் தொடர்ந்து நடந்தது. கூட்டத்தின் முடிவில் வீராங்கனைகளுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் அனுராக் தாக்குர். அப்போது இந்த விவகாரத்தில் விசாரணை முடியும் வரை மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் ஒதுங்கி இருப்பார் என்று அனுராக் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக வீராங்கனைகள் அறிவித்தனர்.

மேற்பார்வை குழு...

தொடர்ந்து இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு மேற்பார்வைக் குழுவை அமைப்பதாக அனுராக் தாக்குர் அறிவித்தார் மேலும் நான்கு வாரங்களில் நீதி வெல்லும் என்று உறுதியளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து