முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் விளம்பரம் இல்லாத டுவிட்டர் - எலான் மஸ்க் தகவல்

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2023      உலகம்
Elon-Musk 2022-12-02

Source: provided

நியூயார்க் : அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட சமூகவலைதளமான டுவிட்டரை கடந்தாண்டு அக்டோபரில் கையகப்படுத்திய உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தில் வருவாய் விளம்பரத்தை மட்டுமே நம்பி இருக்க கூடாதென செயல்பட்டு வருகிறார். பயனர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், ப்ளூடிக் சேவைக்கு கட்டணம், தேவையற்ற செலவுகளை குறைக்க ஊழியர்கள் பணிநீக்கம் என அதிரடி காட்டி வருகிறார்.

இந்நிலையில் எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில், "டிவிட்டரில் விளம்பரங்கள் மிகவும் பெரிய அளவிலும், அடிக்கடியும் வருகிறது. வரும் வாரங்களில் இந்த இரண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." என பதிவிட்டுள்ளார்.

விளம்பரம் இன்றி டுவிட்டர் தளத்தை அணுகும் வகையில் புதிய சந்தாதாரர் திட்டத்தை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து