முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம் ஆத்மி கட்சியினர் தொடர் அமளி: டெல்லி மேயர் தேர்தல் 2-வது முறை ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2023      இந்தியா
AAP 2021 07 19

Source: provided

புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியினரின் தொடர் அமளி காரணமாக மேயர் மற்றும் துணை மேயரை தேர்வு செய்வதற்கான டெல்லி மேயர் தேர்தல் 2வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் நேற்று காலை அவை தொடங்கியதும் நியமன உறுப்பினர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, ஆம் ஆத்மி கட்சியினரின் தொடர் அமளி காரணமாக மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியினரின் தொடர் அமளி காரணமாக மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சித் தோ்தலுக்குப் பிறகு கூடிய முதல் சபையிலேயே மேயா் மற்றும் துணை மேயா் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக உறுப்பினா்களுக்கு இடையே அமளி ஏற்பட்டது. இதனால், அவை ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக முதல் கூட்டத்தில் மேயா், துணை மேயா் தோ்ந்தெடுக்கப்படவில்லை.

டெல்லியில் டிசம்பா் 4-ம் தேதி உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. டிசம்பா் 7-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பாஜகவை வீழ்த்தி, ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வென்று சபையை வழிநடத்த உரிமை கோரியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து