முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓ.பி.எஸ். தரப்புக்கு தமிழ்நாடு கொங்கு பேரவை கட்சி ஆதரவு

புதன்கிழமை, 25 ஜனவரி 2023      தமிழகம்
OPS 2023 01 25

Source: provided

சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. 

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தி.மு.க. கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. அ.தி.மு.க.வின் இருதரப்பினரும் பல்வேறு கட்சிகளை சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு கோரி வருகின்றனர். 

இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்து இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில் தனியரசு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ. பன்னீர் செல்வம் அணிக்கு ஆதரவு அளிக்கிறது. ஓ. பன்னீர் செல்வத்தை தவிர்த்து விட்டு எடப்பாடி பழனிசாமியால் அ.தி.மு.க.விற்கு வலிமை பெற செய்ய முடியாது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து