முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு: முதல்வர் நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

புதன்கிழமை, 25 ஜனவரி 2023      தமிழகம்
OPS 2022 12 10

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு குறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஒரு மாநிலத்தின் சட்டம், ஒழுங்கை பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களே சட்டம், ஒழுங்கை சீரழிப்பது என்பது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. 

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது பணிகளை மேற்கொள்வேன் என்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஓர் அமைச்சர், அதனை முற்றிலும் அவமதிக்கும் வகையில் பணிகளை மேற்கொள்வது என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படுவதற்கு சமம். 

தி.மு.க.வினர் மற்றும் அமைச்சர் பெருமக்களின் செயல்பாடுகளால் தூக்கமே போய்விட்டது என்று வருத்தப்பட்டு முதல்வரே கூறிய நிலையில், முதல்வரின் வார்த்தையை அந்த அமைச்சரே ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட ஓர் சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை என்றே மக்கள் கருதுகிறார்கள்.

குற்றங்களை ஆராய்ந்து எந்தவித பாகுபாடுமின்றி நடுநிலையுடன் செயல்படுவதே நல்ல ஆட்சி முறை என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து